உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் அ.ம.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தஞ்சையில், அ.ம.மு.க ஆர்ப்பாட்டம்

Published On 2023-10-24 09:48 GMT   |   Update On 2023-10-24 09:48 GMT
  • மீன் மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.
  • சாமந்தான் குளத்தில் முறையாக தண்ணீர் விட வேண்டும்.

தஞ்சாவூர்:

தஞ்சை கீழராஜவீதியில் உள்ள நிக்கல்சன் கூட்டுறவு வங்கி அருகே அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு மாநகர மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் தலைமை தாங்கினார்.

மாநில மாணவரணி செயலாளர் நல்லதுரை, செயற்குழு உறுப்பினர் விருதாச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், தஞ்சை மாநகராட்சி 15 மற்றும் 25 ஆகிய வார்டுகளில் வளர்ச்சி பணிகள் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். கீழ்அலங்கம் பகுதியில் உள்ள மீன்மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்றி தர வேண்டும்.

தெற்குவீதி, கீழவீதி, கீழ்அலங்கம், கொண்டிராஜபாளையம், ஏ.ஒய்.ஏ.நாடார் ரோடு, ராவுத்தர்பாளையம், டவுன் போலீஸ் நிலையம் ரோடு ஆகிய இடங்களில் மழைநீர் வடிகால் அமைத்து தர வேண்டும்.

சாமந்தான் குளத்தில் முறையாக தண்ணீர் விட வேண்டும்.

அனைத்து சந்துகளிலும் சிமெண்டு சாலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் மாநகராட்சி கவுன்சிலர் கண்ணுக்கினியாள், ஜெயலலிதா பேரவை செயலாளர் ராமதாஸ், இலக்கிய அணி செயலாளர் ரவிச்சந்திரன், பகுதி செயலாளர்கள் செந்தில், ஆர்.செந்தில் பொதுக்குழு உறுப்பினர் அய்யாவு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News