உள்ளூர் செய்திகள்

ஆக்கிரமிப்பு கடைகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.

தஞ்சையில், 14 கடைகள் இடித்து அகற்றம்

Published On 2023-05-03 09:47 GMT   |   Update On 2023-05-03 09:47 GMT
  • தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
  • உரிமையாளர்களுக்கு கடைகளை காலி செய்யுமாறு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

தஞ்சாவூர்:

நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தஞ்சை பாலாஜி நகர் வாரிப் பகுதியில் 14 கடைகள் ஆக்கிரமிப்பில் இருந்தது. இதையடுத்து அந்தக் கடைகளில் உரிமையா ளர்களுக்கு கடைகளை காலி செய்யுமாறு ஏற்கனவே மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இன்று நீர்நிலை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதற்காக மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தலைமையில் நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன், உதவி செயற்பொறியாளர் கண்ணதாசன் மற்றும் காவல்துறை, வருவாய் துறை அலுவலர்கள் பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர்.

முன்னதாக கடையில் இருந்த பொருட்கள் ஏற்கனவே காலி செய்யப்பட்டது. தொடர்ந்து 14 கடைகளும் இடித்துத் அகற்றப்பட்டன.

மேலும் அந்த பகுதியில் நீர் நிலைகளில் உள்ள வீடுகளை அகற்றுவதற்கு நோட்டீஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News