உள்ளூர் செய்திகள்
சூளகிரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- அர்ஜுன் சம்பத் உருவ படத்தை கிழித்தெறிந்து தீயிட்டு எரித்தனர்.
சூளகிரி,
சூளகிரி ரவுண்டானாவில் அர்ஜுன் சம்பத்தை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சூளகிரி ஒன்றிய செயலாளர் பாக்கியராஜ் தலைமையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில், தொடர்ந்து மத மோதலை உருவாக்கும் வகையில் ஆபாசமாக பேசி விமர்சித்து வருவதாக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்திற்கு எதிர்ப்பு தெரிவத்ததுடன், தமிழக அரசு அர்ஜுன் சம்பத்தை கைது செய்ய வேண்டுமென முழக்கங்களை எழுப்பி, அர்ஜுன் சம்பத் உருவ படத்தை கிழித்தெறிந்து தீயிட்டு எரித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சூளகிரி போலிசார் விரைந்து வந்து தடுத்தனர்.