உள்ளூர் செய்திகள்

சங்கராபுரத்தில் துணிகரம் தனியார் வங்கி ஊழியர் வீட்டில் ரூ. 5 லட்சம் நகை கொள்ளை

Published On 2022-09-07 09:51 GMT   |   Update On 2022-09-07 09:51 GMT
  • மதன் குடும்பத்துடன் திருக்கோவிலூர் அருகே உள்ள சந்தைப்பேட்டையில் அவரது மாமியார் லட்சுமி வீட்டில் தங்கி இருந்தார்.
  • உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோக்களின் கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் புற்று மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மதன்(வயது27). இவர் தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். தனது மனைவி சரண்யாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு மதன் குடும்பத்துடன் திருக்கோவிலூர் அருகே உள்ள சந்தைப்பேட்டையில் அவரது மாமியார் லட்சுமி வீட்டில் தங்கி இருந்தார். இந்த நிலையில் மதனின் வீ்ட்டை சுத்தம் செய்வதற்காக அவரது மாமியார் லட்சுமி, மனைவியின் தங்கை சந்தியா ஆகியோர் சந்தை ப்பேட்டையில் இருந்து புறப்பட்டு சங்கராபுரத்துக்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோக்களின் கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன.

மேலும் அதில் இருந்த 14½ பவுன் நகைகள், 3 ஜோடி கொலுசு, 2 பட்டு புடவைகள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த கொள்ளை சம்பவம் பற்றிய தகவல் அறிந்து சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலை மையில் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி மற்றும் போலீசார் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர் ராஜவேல் வரவழை க்கப்பட்டு பீரோ, கதவுகளில் இருந்த ரேகைகளை அவர் பதிவுசெய்தார். இது குறித்து மதன் கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News