உள்ளூர் செய்திகள்

ராயக்கோட்டையில் போலீசாரை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றபோது எடுத்தப்படம்.

ராயக்கோட்டையில் போலீசாரை கண்டித்து பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டம்

Published On 2022-06-26 08:45 GMT   |   Update On 2022-06-26 08:45 GMT
  • ராயக்கோட்டையில் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • அப்போது போலீசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பாஞ்சாலி நகரை சேர்ந்தவர் குமார். இவருடைய மகன் பாலாஜி வயது 15. அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த 15-ம் தேதி வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்ற மாணவன் மாயமானார். இது தொடர்பாக மாணவனின் தாய் கவிதா கொடுத்த புகாரின்பேரில் ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் மாணவனை மீட்க போலீசார் அலட்சியம் காட்டுவதை கண்டித்து ராயக்கோட்டையில் உள்ள 4 ரோடு அண்ணா சிலை அருகே பாரதிய ஜனதா கட்சி மற்றும் மாணவனின் உறவினர்கள், பா.ஜக. மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் அன்பரசு, பொருளாளர் சீனிவாசலு ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் பேசிய போலீசார் இரு நாட்களில் மாணவனை மீட்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இதனால் ஆர்ப்பாட்ட த்தை கைவிட்டனர். மாவட்ட மகளிரணி தலைவி மஞ்சுளா, நெசவாளர் அணி மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், கிழக்கு ஒன்றிய தலைவர் நவநீதகிருஷ்ணன், மேற்கு ஒன்றிய தலைவர் சந்துரு, முன்னாள் ஒன்றிய செயலாளர் பிரவீன் தர்ஷன்குமார், தமிழ் வளர்ச்சி ஒன்றிய தலைவர் கோவிந்தராஜ் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News