உள்ளூர் செய்திகள்

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

புதுக்குடி ஊராட்சியில், 18 பேருக்கு தனிநபர் வங்கி கடன்- கலெக்டர் தகவல்

Published On 2022-10-26 10:10 GMT   |   Update On 2022-10-26 10:10 GMT
  • 42 விண்ணப்பங்கள் பெறப்பட்டு வங்கி பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
  • பி.எம்.இ.ஜி.பி. திட்டத்தின் மூலம் தலா ரூ.50 ஆயிரம் மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்பட்டது.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெ க்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

தஞ்சை மாவட்டம் பூதலூர் வட்டாரம் புதுக்குடி ஊராட்சியில் உள்ள நரிக்குறவர் காலனியில் வசிக்கும் விளிம்பு நிலை மக்கள் வாழ்வாதார நடவடிக்கைகளுக்காக பாரம்பரிய தொழிலான பாசிமணி, வளையல், காது வளையம் போன்ற தொழில்களை மேம்படுத்தும் நோக்கில் வங்கி மூலம் தனிநபர் கடன் உதவி கோரி மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மேலாண்மை அலகு மூலம் மேற்கூறிய தொழில்களை மேம்படுத்த நோக்கில் வங்கி மூலம் தனிநபர் கடன் உதவி கோரிய விளிம்பு நிலை மக்களை நேரில் கள ஆய்வு செய்து 42 விண்ணப்பங்கள் பெறப்பட்டு வங்கி பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் பாரத மாநில வங்கிகளின் மூலம் விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டு 18 நபர்களுக்கு தனிநபர் கடன் மாவட்ட தொழில் மைய பி.எம்.இ.ஜி.பி. திட்டத்தின் மூலம் தலா ரூ.50 ஆயிரம் மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News