உள்ளூர் செய்திகள்

கோழி தீவன அரவை ஆலையில் பயிரிடப்பட்ட கஞ்சா செடி

Published On 2023-01-19 09:38 GMT   |   Update On 2023-01-19 09:38 GMT
  • சன்னியாசி கரடு என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான கோழி தீவன அரவை ஆலை இயங்கி வருகிறது.
  • இந்த அரவை ஆலை வளாகத்தில் கஞ்சா செடி பயிரிடப்பட்டு உள்ளதாக நாமக்கல் நகர போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் திடீர் சோதனை நடத்தினர்.

நாமக்கல்:

நாமக்கல் - மோகனூர் சாலையில் வகுரம்பட்டி ஊராட்சி க்கு உட்பட்ட சன்னியாசி கரடு என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான கோழி தீவன அரவை ஆலை இயங்கி வருகிறது. இதில் ஏராளமான வடமாநில தொழிலாளிகள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த அரவை ஆலை வளாகத்தில் கஞ்சா செடி பயிரிடப்பட்டு உள்ளதாக நாமக்கல் நகர போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 3 கிலோ எடையுள்ள ஒரு கஞ்சா செடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த செடியை காவல் நிலையத்திற்கு எடுத்து வந்த போலீசார் இது தொடர்பாக ஆலை உரிமையாளர் குணசேகரன் மற்றும் பணியாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News