உள்ளூர் செய்திகள்

மொரப்பூரில் நாராயணசாமி நாயுடு நினைவு தினம் அனுசரிப்பு

Published On 2022-12-22 09:25 GMT   |   Update On 2022-12-22 09:25 GMT
  • நாராயணசாமி நாயுடு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
  • நிலத்தடி நீர் மேம்பாட்டு சங்க நிர்வாகிகள் பிரபாகரன், சுரேஷ், விஸ்வநாதன், செல்வகுமார், சரவணன், அன்பு ஸ்ரீராமுலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மொரப்பூர்,

தருமபுரி மாவட்டம், மொரப்பூர் நிலத்தடி நீர் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் விவசாய சங்க தலைவர் மறைந்த நாராயணசாமி நாயுடு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு நிலத்தடி நீர் மேம்பாட்டு சங்க தலைவர் ஜெயபால் தலைமை வகித்து நாராயணசாமி நாயுடு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் நிலத்தடி நீர் மேம்பாட்டு சங்க நிர்வாகிகள் பிரபாகரன், சுரேஷ், விஸ்வநாதன், செல்வகுமார், சரவணன், அன்பு ஸ்ரீராமுலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News