உள்ளூர் செய்திகள்

 மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாற்றத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேல்மலையனூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை வழங்க கோரி காத்திருப்பு போராட்டம்

Published On 2022-11-30 07:50 GMT   |   Update On 2022-11-30 07:50 GMT
  • தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சார்பில் கோரிக்கை வைத்தனர்.

விழுப்புரம்:

மேல்மலையனூர் ஒன்றியம் கரடிக்குப்பம் நொச்சலூர், பெருவளூர் ஆகிய ஊராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படவில்லை. .

இதனால் அந்த 3 ஊராட்சிகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மா ர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட அமைப்பாளர் குமார் தலைமையில், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த தாசில்தார் அலெக்சாண்டர், வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பி ரமணியன், வளத்தி இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தி தாசில்தார் அலுவலகத்துக்கு சமதான கூட்டத்துக்கு வருமாறு கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர்.பின்பு தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சார்பில் கோரிக்கை வைத்தனர்.

அதன்படி கரடிக்கு ப்பம், நொச்சலூர், பெருவளூர் ஆகிய ஊராட்சிகளில் அனைத்து மாற்றுதிறனாளிகளுக்கும் தொடர்ந்து 100 நாள் வேலை வழங்கப்படும், நிலுவைத் தொகை வழங்காமல் இருந்தால் உடன டியாக வழங்கப்படும், 20-க்கும் மேற்பட்ட மாற்றுத்தி றனாளிகள் உள்ள கிராமங்களில் அவர்களுக்குள் ஒரு பணித்தள பொறு ப்பாளர்கள் நியமித்துக் கொள்ள அனுமதி அளிக்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News