உள்ளூர் செய்திகள்

நம்ம உழவன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

மயிலாடுதுறையில், நம்ம உழவன் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2023-03-22 09:39 GMT   |   Update On 2023-03-22 09:39 GMT
  • வேளாண் இல்லாது உலகம் வெல்லாது உழவர்களுக்கான பாடலை வெளியிட்டார்.
  • விவசாயம் சார்ந்த படிப்புகளை மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறையை அடுத்த வள்ளாலகரம் ஊராட்சி, லட்சுமிபுரத்தில் உள்ள யூரோ கிட்ஸ் என்ற மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி சார்பில் விவசாயம் மற்றும் அதை சார்ந்த படிப்புகளுக்கான ஆர்வத்தை மாணவ மாணவிகளுக்கு ஏற்படுத்தும் வகையில் நம்ம உழவன் எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் பங்கேற்று வேளாண் இல்லாது உலகம் வெல்லாது உழவர்களுக்கான சிறப்பு தீம் பாடலை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய பொன்ராஜ் உழவர்களை முன்னெடுத்துச் சென்றால் டாக்டர் அப்துல் கலாம் கண்ட கனவு இந்தியா விரைவில் மலரும் என்று தெரிவித்தார். தொடர்ந்து விவசாயத்தின் பெருமையை உணர்த்தும் வகையில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சின்னத்திரை கலைஞர் அறந்தாங்கி நிஷா, நாகை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, சுற்றுச்சூழல் ஆர்வலர் நிமல் ராகவன் குத்தாலம் சாதிக் பாட்ஷா உள்ளிட்ட பலர் பங்கேற்று விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்தும் அதனை சார்ந்த வேலை வாய்ப்புகளையும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறி விவசாயம் சார்ந்த படிப்புகளை மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதில் ஒன்றிய கவுன்சிலர் மோகன், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதா ராபர்ட் ஜெயகரன், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஆசிரியைகள் மாணவர்–களின் பெற்றோர்கள் என ஏராளமானவர்கள் கலந்துக்கொன்டனர்.

Tags:    

Similar News