உள்ளூர் செய்திகள்

மயிலாடுதுறையில், புதிய பஸ் நிலையம் அமைய நகர்மன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மயிலாடுதுறையில், புதிய பஸ் நிலையம் அமைய ரூ.24 கோடி நிதி ஒதுக்கீடு

Published On 2022-10-29 09:02 GMT   |   Update On 2022-10-29 09:02 GMT
  • புதிய பஸ் நிலைய கட்டிடம் தரமாக கட்டப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
  • அ.தி.மு.க. ஆட்சியில் தனியார் பங்கேற்புடன் பஸ் நிலையம் கட்ட டெண்டர் விடப்பட்டது.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறையில் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் திட்டம் 2027-2022-இன்கீழ் ரூ.24 கோடி மதிப்பீட்டில் புதிய ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைப்பதற்காக கடந்த 16-ஆம் தேதி ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டது.

இந்த பணிக்கான ஒப்புதல் கோரி மயிலாடுதுறை நகராட்சி அலுவலகக் கூட்ட அரங்கில் நடை பெற்ற அவசர நகர்மன்றக் கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார்.

ஆணையர் செல்வபாலாஜி முன்னிலை வகித்தார்.

அப்போது நடைப்பெற்ற விவாதங்கள் வருமாறு:

நடராஜன் (தி.மு.க.) :

மயிலாடுதுறை மக்களின் 34 ஆண்டு கால கனவை நிறைவேற்றும் வகையில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் புதிய ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கும், பேருந்து நிலையம் அமைக்க இடம் தந்த தருமபுரம் ஆதீனம், நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர், அமைச்சர்களுக்கும் நன்றி.

கணேசன் (ம.தி.மு.க) : 

புதிய பஸ் நிலையத்திற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்ட பின்னர் நகராட்சி பொது நிதியிலிருந்து சுமார் ரூ.1 கோடி (4.97 சத வீதம்) கூடுதலாக ஒதுக்க வேண்டியதன் அவசியம் என்ன ? புதிய பஸ் நிலைய கட்டடம் தரமாக கட்டப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

ஆனந்தி (அ.தி.மு.க) : -

புதிய பஸ் நிலையம் அமைய காரணமாக இருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் அதற்கு நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ் டாலினுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைவர்:-

இடம் தேர்வு செய்து அதற்கான தீர்மானம் நிறைவேற்றியது மக்களால் தேர்வு செய்யப் பட்ட தி.மு.க நகரமன்றத்தில் தான்.

அதிமுக ஆட்சியில் தனியார் பங்கேற்புடன் பேருந்து நிலையம் கட்ட டெண்டர் விடப்பட்டது. அப்போது டெண்டர் எடுக்க யாரும் முன் வரவில்லை.

தற்போதைய தமிழக முதல்வரிடம் எடுத்துக் கூறி அதனை அவர் ஏற்று முழுமையான மானியத்துடன் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

அதற்காக தமிழக முதலமைச்சருக்கும் உறுதுணையாக இருந்த அமைச்சர்கள்.

எம்எல்ஏக்க ளுக்கும், ஒத்துழைப்பு தந்த நகர் மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.

நிகழ்சியின் முடிவில் நகர்மன்ற துணைத் தலைவர் சிவக்குமார் நன்றி கூறினார்.

பின்னர், நகர்மன்றத் தலைவர் செல்வராஜ் தலைமையில் நகராட்சி அலுவலகம் முன்பு நகர்மன்ற உறுப்பினர்கள் பட்டாசு வெடித்து மகிழ்சியை வெளிப்படுத்தினர்.

பின்னர் அனைவரும் ஊர் வலமாக வந்து பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த னர். இதில் ராஜகுமார் எம்எல்ஏ கலந்துகொண்டார்.

Tags:    

Similar News