உள்ளூர் செய்திகள்

மத்தூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

மத்தூரில் சிறப்பு கிராமசபை கூட்டம்

Published On 2023-03-23 15:11 IST   |   Update On 2023-03-23 15:11:00 IST
  • ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி தலைமை ஊராட்சி மன்ற அலக வாளாகத்தில் தலைம கூட்டம் நடைபெற்றது.
  • இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி வெங்கடேசன் செய்திருந்தார்.

மத்தூர்,  

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம், மத்தூர் ஊராட்யில் உலக தண்ணீர் தின சிறப்பு கிரா சபை கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி தலைமை ஊராட்சி மன்ற அலக வாளாகத்தில் தலைம கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் விடுபட்ட அனைத்து கிராம வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வழங்குதல் குடிநீர் வழங்குதல், கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு மிக்க இடங்களில் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு குடிநீர் பிரச்சனைகளை தீர்த்தல், வறுமைக்கோட்டுக்கு கீழ் இலக்கு மக்கள் பட்டியலில் விடுபட்ட பயனாளிகளை சேர்த்தல் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர், வார்டு உறுப்பினர்கள் மக்கள் நல பணியாளர் ராஜா, சுய உதவிக் குழு பெண்கள், தொண்டு நிறுவனங்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி வெங்கடேசன் செய்திருந்தார்.

Similar News