உள்ளூர் செய்திகள்

அங்கன்வாடி அருகே கொட்டப்படும் கிரானைட் கழிவுகள்.

சூளகிரி அருகே குருமசப்படி கிராமத்தில் கிரானைட் கழிவுகளால் குழந்தைகளுக்கு பாதிப்பு

Published On 2022-09-23 15:16 IST   |   Update On 2022-09-23 15:16:00 IST
  • குழந்தைகள் காலை முதல் மாலை வரை தங்கி கல்வி கற்றும் உணவு சாப்பிட்டும் வருகின்றனர்.
  • கிரானைட் கழிவுகளை எடுத்து வந்து கொட்டுவதால் காற்றில் பரக்கும் துகளால் மூச்சு திணறல் நோய் பரவும் அபாயம் உள்ளதாக குழந்தைகளின் பெற்றோர் புகார் கூறி வருகின்றனர்.

சூளகிரி.

சூளகிரி தாலுகா காமன்தொட்டி ஊராட்சியை சேர்ந்தது குருமசப்படி கிராமம். இந்த கிராமத்தில் அரசு அங்கன்வாடி பள்ளி உள்ளது.

இந்தப்பள்ளிக்கு குருமசப்படி, சப்படி, பெரியசப்படி, கோட்டப்பள்ளி ஆகிய பகுதிகளில் இருந்து இருந்து 2 வயது முதல் 5 வயது வரையிலான குழந்தைகள் காலை முதல் மாலை வரை தங்கி கல்வி கற்றும் உணவு சாப்பிட்டும் வருகின்றனர்.

இந்த பள்ளியில் ஒரு ஆசிரியர் மற்றும் உதவியாளர் உள்ளனர். மேலும் இங்குள்ள அங்கன்வாடிக்கு கருவுற்ற பெண்கள் சத்து பவுடர் வாங்கியும் சென்று வருகின்றனர்.

இந்த பள்ளி அருகே உள்ள நிலத்தில் கிரானைட் கழிவுகளை எடுத்து வந்து கொட்டுவதால் காற்றில் பரக்கும் துகளால் மூச்சு திணறல் நோய் பரவும் அபாயம் உள்ளதாக குழந்தைகளின் பெற்றோர் புகார் கூறி வருகின்றனர்.

உடனே அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

Tags:    

Similar News