கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க சார்பில் தண்ணீர் பந்தல்
- அ.தி.மு.க., சார்பில், எல்.ஐ.சி., அலுவலகம் அருகில் நேற்று தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
- ஒன்றிய செயலாளர் கண்ணியப்பன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அசோக்குமார் முன்னிலை வகித்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், எல்.ஐ.சி., அலுவலகம் அருகில் நேற்று தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
ஒன்றிய செயலாளர் கண்ணியப்பன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அசோக்குமார் முன்னிலை வகித்தார். அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., தண்ணீர் பந்தலைத் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு தர்பூசணி, நீர்மோர், இளநீர், குடிநீர் பாட்டில் போன்றவற்றை வழங்கினார்.
நிகழ்ச்சியில், மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, காவேரிப்பட்டணம் ஒன்றிய செயலாளர் பையூர் ரவி உள்பட பலர் பங்கேற்றனர். இதேபோல் நகர அ.தி.மு.க.,
சார்பில், கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகிலும், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகிலும் அமைத்திருந்த தண்ணீர் பந்தல் திறப்பு விழாவிற்கு, நகர செயலாளர் கேசவன் தலைமை தாங்கினார்.
அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அசோக்குமார் முன்னிலை வகித்தார். அ.தி.மு.க., துணை பொதுச் செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., தண்ணீர் பந்தலைத் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு தர்பூசணி, நீர்மோர், இளநீர், ஆரஞ்சி, ஜூஸ் பாட்டில், குடிநீர் பாட்டில் போன்றவற்றை வழங்கினார். நிகழ்ச்சியில் மற்றும் 33 வட்டச் செயலாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.