உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் ஓய்வுபெற்ற நீதித்துறை அலுவலர்கள் நலச்சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம்

Published On 2022-10-20 14:55 IST   |   Update On 2022-10-20 14:55:00 IST
  • 65, 70, 75 வயது முதிர்ந்த ஓய்வூதியர்களுக்கும் அடிப்படை ஊதியத்தில் முறையே 5, 10, 15 சதவீதம் உயர்த்தி கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் வழங்கி வரும் மருத்துவ உதவித் தொகை ரூ.1000 போல், தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கும் உயர்த்தி வழங்க வேண்டும்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்ட ஓய்வு பெற்ற நீதித்துறை அலுவலர்கள் நலச்சங்கத்தின் 11ம் ஆண்டு விழா மற்றும் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் ராஜாமணி தலைமை தாங்கினார். சட்ட ஆலோசகர் வைத்தியநாதன், இணை செயலாளர் கோபிநாதராவ், துணைத் தலைவர் காவேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் சையத் ஷபீர் வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் கோபால் ஆண்டறிக்கை வாசித்தார். செயலாளர் வெங்கடேசன் வரவு செலவு கணக்கை சமர்பித்தார். ஓய்வு பெற்ற அலுவலர் சங்க மாவட்ட தலைவர் மாதன், செயலாளர் துரை.ஜெகன்நாதன், ஓய்வுபெற்ற தாசில்தார் ஜனார்தனராவ், குடியிருப்போர் நலச்சங்க செயலாளர் தங்கவேலு, மாவட்டத் தலைவர் செல்வகுமார், வியாபாரிகள் சங்க நகர தலைவர் சுரேஷ், சத்தியவாணி, பேபிசரஸ்வதி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

இக்கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் வழங்கி வரும் மருத்துவ உதவித் தொகை ரூ.1000 போல், தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கும் உயர்த்தி வழங்க வேண்டும். ஓசூர், தேன்கனிக்கோட்டையில் குடியிருக்கும் ஓய்வூதியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் மலைவாழ்படி, குளிர் கால படி அரசுப் பணியாளர்களுக்கு கொடுப்பது போல் வழங்கிட வேண்டும். கடந்த 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதிக்கு முன்பு ஓய்வுபெற்ற போது வகித்த பதவியின் ஊதிய விகிதம் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் தொகையுடன் 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதியில் உள்ளதர ஊதியம் சேர்த்து வரும் தொகையில், 50 சதவீதம் வரை அதிகரித்து, மத்திய அரசு ஆணை வழங்கியிருக்கின்றது.

அதே போல், தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும். 65, 70, 75 வயது முதிர்ந்த ஓய்வூதியர்களுக்கும் அடிப்படை ஊதியத்தில் முறையே 5, 10, 15 சதவீதம் உயர்த்தி கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News