உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை குறித்து விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடந்தது.

கிருஷ்ணகிரியில்ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை குறித்த விழிப்புணர்வு கூட்டம்

Published On 2023-01-07 15:49 IST   |   Update On 2023-01-07 15:49:00 IST
  • நாடு முழுவதும் வாழும் மக்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில் இருந்தே ரேஷன் பொருட்களை வாங்குவதற்காக செயல்படுத்தப்படும்
  • மத்திய அரசு தொகுப்பில் கிடைக்கும் அனைத்து பொருட்களையும் அவர்களது ரேஷன் அட்டைகளை பயன்படுத்தி வாங்கலாம்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி மண்டல கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ஏகாம்பரம் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் பேசுகையில், நாடு முழுவதும் வாழும் மக்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில் இருந்தே ரேஷன் பொருட்களை வாங்குவதற்காக செயல்படுத்தப்படும் இத்திட்டம் பொதுமக்களுக்கு சிறந்த வகையில் உதவியாக அமைந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏராளமான அண்டை மாநிலத்தவர்கள் குடும்பத்துடன் தங்கி வேலை பார்க்கின்றனர்.

அவர்களில், 50 சதவீத குடும்பத்திற்கும் மேற்பட்டோர் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே ரேஷன் பொருட்களை தொடர்ந்து வாங்கி வருகின்றனர்.

மத்திய அரசு தொகுப்பில் கிடைக்கும் அனைத்து பொருட்களையும் அவர்களது ரேஷன் அட்டைகளை பயன்படுத்தி வாங்கலாம்.

அதேபோல் பல்வேறு மாவட்டத்திலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தங்கி வேலை பார்ப்பவர்கள் தங்கள் ரேஷன் அட்டைகளில் முகவரி மாற்றமின்றி மத்திய, மாநில தொகுப்புகளின் கீழ் கிடைக்கும் அனைத்து ரேஷன் பொருட்களையும் வாங்கலாம். இத்திட்டத்தை பயன்படுத்தி முகவரி மாற்றமின்றி அனைவரும் ரேஷன் பொருட்களை பெற்று பயன் பெறலாம் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க துணை பதிவாளர் (பொது வினியோக திட்டம்) குமார், சுந்தரம், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News