கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்
- தி.மு.க.வில் உறுப்பினர்கள் சேர்க்கை, பூத் கமிட்டி தொடர்பாக பேசப்படுகிறது.
- மேலும் சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதித்த விஷயங்கள் தொடர்பாக பேசப்படுகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ் தலைமையில் நாளை (சனிக்கிழமை) காலை 10.35 மணிக்கு கிருஷ்ணகிரி தேவராஜ் மகாலில் நடைபெற உள்ளது.
இதில் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள், தி.மு.க.வில் உறுப்பினர்கள் சேர்க்கை, பூத் கமிட்டி தொடர்பாக பேசப்படுகிறது. மேலும் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதித்த விஷயங்கள் தொடர்பாக பேசப்படுகிறது.
எனவே கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாநில நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், மற்றும் அனைத்து நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாவட்ட ஊராட்சி குழு, ஒன்றிய குழு நிர்வாகிகள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள், பி.எல்.ஏ-2 உள்ளிட்ட அனைவரும் தவறாமல் இந்த மாவட்ட செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.