உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

கிருஷ்ணகிரியில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-06-28 08:47 GMT   |   Update On 2022-06-28 08:47 GMT
  • கடந்த சில ஆண்டுகளாக ராணுவத்திற்கு ஆள் சேர்க்காததன் விளைவாக 2.5 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன.
  • ஏற்கனவே ராணுவத்திற்காக எழுத்து தேர்வு மற்றும் பிற தேர்வுகளை முடித்தவர்கள் ஏராளமானோர் காத்திருக்கிறார்கள்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

வட்ட செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டில்லிபாபு, மாவட்ட செயலாளர் சேகர் ஆகியோர் விளக்கவுரை ஆற்றினர். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சாம்ராஜ், நஞ்சுண்டன், சுரேஷ், மகாலிங்கம் ஆகியோர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பேசியதாவது:-

கடந்த 8 ஆண்டுகளாக நாட்டில் அனைத்து பகுதி மக்களின் வாழ்வாதாரங்களை சீரழித்த மத்திய அரசு தற்சமயம் நாட்டின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே ராணுவ தளவாடங்கள் உற்பத்தியில் 100 சதவீதம் தனியார் துறைக்கும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் அனுமதி அளித்த வகையில், நாட்டின் பாதுகாப்பை பற்றி கவலை இல்லாத அரசாக மத்திய பா.ஜனதா அரசு உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ராணுவத்திற்கு ஆள் சேர்க்காததன் விளைவாக 2.5 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. ஏற்கனவே ராணுவத்திற்காக எழுத்து தேர்வு மற்றும் பிற தேர்வுகளை முடித்தவர்கள் ஏராளமானோர் காத்திருக்க, மத்திய அரசு ராணுவத்திற்கு தற்காலிக அடிப்படையில் 46 ஆயிரம் பேரை சேர்ப்பதாகவும், நான்கு ஆண்டுகள் மட்டும் இவர்களுக்கு பயிற்சி அளிப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனவே அக்னிபத் திட்டத்தை மோடி அரசு திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

மேலும் இக்கோரிக்கை களை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

Similar News