கிருஷ்ணகிரியில் நடந்த திருமண விழாவில் மணமக்கள் ஆர்.நவீன்குமார் எம்.ஜி.பைரவியை, தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்திய போது எடுத்த படம். அருகில் அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்ளனர்.
கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் இல்லத் திருமண விழா -எடப்பாடி பழனிசாமி நேரில் வாழ்த்து
- திருமணம் கிருஷ்ணகிரி தேவராஜ் மகாலில் நேற்று காலை நடைபெற்றது.
- எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சோக்காடி ராஜன்-கிருஷ்ணகிரி ஒன்றிய குழு தலைவர் ஆர். அம்சா ராஜன் தம்பதியரின் மகன் ஆர். நவீன்குமாருக்கும், கிருஷ்ணகிரி போகனப்பள்ளி தொழில் அதிபர் பி.மணி என்கிற கணேசன் - ராஜி தம்பதியரின் மகள் எம்.ஜி. பைரவிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இவர்களின் திருமணம் கிருஷ்ணகிரி தேவராஜ் மகாலில் நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. இந்த விழாவில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
மணமக்கள் ஆர்.நவீன்குமார்-எம்.ஜி. பைரவி, தமிழக முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். இந்த விழாவில் அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ., கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் மு.தம்பிதுரை எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், வீரமணி, முல்லைவேந்தன், மாவட்ட செயலாளர்கள் அசோக்குமார் எம்.எல்.ஏ. (கிருஷ்ணகிரி கிழக்கு), பாலகிருஷ்ணரெட்டி (கிருஷ்ணகிரி மேற்கு), ஊத்தங்கரை தமிழ்செல்வம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முனிவெங்கடப்பன், சி.வி.ராஜேந்திரன், மனோரஞ்சிதம் நாகராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் தென்னரசு, நகர செயலாளர் கேசவன், முன்னாள் நகராட்சி தலைவர் கே.ஆர்.சி.தங்கமுத்து மற்றும் அ.தி.மு.க. பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.