கிருஷ்ணகிரியில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்திய கடைகளுக்கு அதிரடி அபராதம்
- கிருஷ்ணகிரியில் கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.
- பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி பிடிபட்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் கடை கள், வணிக நிறுவனங்களில் மக்காத பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாடு அதிக அளவில் உள்ளதாக நகராட்சி தலைவர் பரிதாநவாப்பிற்கு புகார் சென்றது.
இதையடுத்து கடை கள் மற்றும் வணிக நிறு வனங்களில ஆய்வு செய்திட அவர் உத்தரவிட்டார்.அதன் பேரில் நகராட்சி சுகாதார அலுவலர் மோகனசுந்தரம் தலைமையில், ஆய்வா ளர்கள் உதயகுமார், சந்திரகுமார், கோவிந்தராஜ் மற்றும் அலுவலர்கள் வணிக நிறுவனங்கள், தின்பண்டங்கள் விற்பனை செய்ய கூடிய கடைகளில் ஆய்வு செய்தனர். இதில் சப்ஜெயில் சாலையில் தின்பண்டங்கள் விற்பனை செய்ய கூடிய கடைகளில் மக்காத பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து 3 கடை களுக்கு, ரூ.7 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: மக்காத பிளாஸ்டிக் கவர்களை வணிக நிறுவனங்கள், கடைகளில் விற்பனை செய்ய கூடாது. துணிப்பைகளை பயன்படுத்திட வேண்டும். அவ்வாறு பிளாஸ்டிக் கவர்களில் பொருட்களை வழங்குபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.