கோத்தகிரியில் நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயற்குழு கூட்டம்
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- எதிர்கால அமைப்பின் செயல்பாடுகள் குறித்து கூறினார்.
சங்கத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம் தலைவர் வாசுதேவன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் செயலாளர் ராஜன் அமைப்பின் கடந்த மாதத்தின் செயல்பாடுகள் குறித்தும் மற்றும் வரும் எதிர்கால அமைப்பின் செயல்பாடுகள் குறித்து கூறினார்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்ப–ட்டன. ஜான்சன்ஸ்கொயர் முதல் மார்கெட் வரை உள்ள பழுதான நடைபாதையை சரிசெய்ய சம்மந்தப்பட்ட அதிகாரிகளை வலியுறுத்துவது என்றும். வரும் 22ம்தேதி அமைப்பின் சார்பில் நடைபெறும் ஒரு நாள் பயிற்சி முகாமிற்கு பி.ஐ.எஸ் தரக்கட்டுப்பாடு அதிகாரிகளை அழைப்பது என்றும், கோத்தகிரி அரசு சித்தா மருத்துவ பிரிவில் மருத்துவரை நியமனம் செய்ய அதிகாரிகளை வலியுறுத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பொருளாளர் மரியம்மா, துணை தலைவர்கள் செல்வராஜ், ஜெயந்தி, இணை செயலாளர்கள். ஜம்புலிங்கம், கண்மணி முகமது இஸ்மாயில், ஆலோசகர் பிரவின், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கூடுதல் செயலாளர் முகமது சலீம் நன்றி கூறினார்.