உள்ளூர் செய்திகள்

காவேரிப்பட்டணத்தில் திருட்டுதனமாக மதுவிற்ற பெண் அதிரடி கைது

Published On 2022-06-23 10:35 GMT   |   Update On 2022-06-23 10:35 GMT
  • குடிமகன்கள் குடித்துவிட்டு தினமும் ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • கள்ளத்தனமாக மது விற்ற பெண் ஒருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

காவேரிபட்டணம்,

நேற்று காலை காவேரிப்பட்டணம் அம்பேத்கர் நகர் பொதுமக்கள் சந்து கடைகளில் கள்ளத்தனமாக மது விற்பதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அப்போது அப்பகுதி மக்கள் கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதை உடனடியாக தடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்தனர்.

பொதுமக்கள் கூறும்போது இங்கு கள்ளத்த னமாக மது விற்பனை செய்கிறார்கள். இதனால் இப்பகுதியில் பெண்கள் மிகுந்த அச்சத்துடன் நடமாடவேண்டியுள்ளது. குடித்துவிட்டு தினமும் ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர் எனவே உடனடியாக இப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கள்ளத்தனமாக மது விற்பதை தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

காவேரிபட்டினம் பேரூராட்சி தலைவர் செந்தில்குமார் கள்ளத்தனமாக மது விற்பனை செய்பவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என காவல்துறையினரிடம் கேட்டுக்கொண்டார். மேலும் அப்பகுதி மக்கள் காவல்துறையிடம் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தனர். காவேரிப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி அப்பகுதியில் கள்ளத்தனமாக மது விற்ற பெண் ஒருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் பெண்கள் சிறைச்சாலையில் அடைத்தனர். 

Similar News