உள்ளூர் செய்திகள்

கோட்டை ஸ்ரீஜலகண்டேஸ்வரர்.

காவேரிப்பட்டினம் பகுதியில் ஈஸ்வரன் கோவில்களில் அன்னாபிஷேகம்

Published On 2022-11-08 15:49 IST   |   Update On 2022-11-08 15:49:00 IST
  • ஸ்ரீநகரேஸ்வர் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நிகழ்ச்சி நடந்தது.
  • அன்னாபிஷேகத்திற்கு வைக்கப்பட உணவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது

காவேரிப்பட்டணம்.

காவேரிபட்டினம் தென்பெண்ணை ஆற்றில் ஓரம் அமைந்துள்ள ஆரிய வைசிய சமூகத்தினரின் ஸ்ரீ நகரேஸ்வரர் ஆலயத்தில் பாலாஜி ஜூவல்லரி அறங்காவலர் ரமேஷ் குடும்பத்தினர் சார்பில் ஸ்ரீநகரேஸ்வர் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நிகழ்ச்சி நடந்தது.

அதேபோல் காவேரிபட்டி னம் சக்தி விநாயகர் ஆலயம் அருகில் உள்ள விஸ்வகர்மா சமூகத்தினர் சார்பில் காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பர ஈஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது

கோட்டை ஜல கண்டேஸ்வ ரர் கோவிலில் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடந்தது சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அன்னாபிஷேகத்தில் கலந்து கொண்டு அருள் பெற்றனர்.

பன்னீர்செல்வம் தெருவில் உள்ள சுகவனேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்தது , அனைத்து கோவில்களிலும் ஈஸ்வரனை சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு அன்னாபிஷேகத்திற்கு வைக்கப்பட உணவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.

Tags:    

Similar News