காரிமங்கலம் பேரூராட்சியில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்த படம்.
காரிமங்கலத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்
- கலெக்டர் சாந்தி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- காந்தி பூங்கா சீரமைப்பு பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு பஞ்சாயத்துகளில் மத்திய மாநில அரசு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குறிப்பாக பெரியாம்பட்டி முதல் நிலை பஞ்சாயத்தில் சமத்துவ புர சீரமைப்பு பணிகள், பூலாபட்டி சாலையில் சமுதாயக்கூடம் மற்றும் பூங்கா பணிகள், தொகுப்பு வீடு ஆகியவற்றையும் பைசுஅள்ளி பஞ்சாயத்தில் வேளாண்மை துறை சார்பில் நடந்த ஏரி தூர் வாரும் பணி, திண்டல் பஞ்சாயத்தில் பூந்தோட்டம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து காரிமங்கலம் தேர்வுநிலை பேரூராட்சியில் நடந்து வரும் எரிவாயு தகனமேடை மற்றும் காந்தி பூங்கா சீரமைப்பு பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, கலைவாணி, பேரூராட்சி செயல் அலுவலர் ஆயிஷா, பஞ்சாயத்து தலைவர்கள் ஜெயலட்சுமி சங்கர், உமா குப்புராஜ் செயற்பொறியாளர்கள் முருகன், அன்பழகன், செயலாளர்கள் முருகன், குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.