உள்ளூர் செய்திகள்

ஜவளகிரி வனப்பகுதியில் பணம் வைத்து சூதாடிய 8 பேரை மடக்கி பிடித்த போலீசார்

Published On 2022-07-03 14:49 IST   |   Update On 2022-07-03 14:49:00 IST
  • 8 பேர் கொண்ட ஒரு கும்பல் அப்பகுதியில் பணம் வைத்து சூதாடியது தெரிய வந்தது.
  • ரூ.1.67 லட்சம் பணம் , கார்கள், மோட்டார்சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியை அடுத்துள்ள தளி போலீஸ் சரகம் ஜவளகிரி வன பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது 8 பேர் கொண்ட ஒரு கும்பல் அப்பகுதியில் பணம் வைத்து சூதாடியது தெரிய வந்தது.

இதையடுத்து கொல்லகொண்டஅள்ளி பகுதியை சிறந்த வெங்கடேஷ் (37), ஸ்ரீனிவாஸ் (38), மாரியப்பன் (42), சீனிவாசன்(42), ராஜேஷ்(28), ஸ்ரீனிவாசன் (56), நாராயணப்பா (54), மாரியப்பா(65) ஆகிய 8 போரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து ரூ.1.67 லட்சம் ரொக்கப்பணம், 2 கார்கள் , 8 மோட்டார்சைக்கிள்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News