உள்ளூர் செய்திகள்

ஓசூரில் கபிலர் விருது பெற்ற ஓய்வு பெற்ற தமிழாசிரியருக்கு பாராட்டு விழா

Published On 2022-09-22 15:33 IST   |   Update On 2022-09-22 15:33:00 IST
  • அறம் இலக்கிய அமைப்பின் செயலாளர் ராசு வரவேற்றார்.
  • ஓசூர் ரெயில் நிலைய சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 2 விழாவிற்கு, ஓசூர் முன்னாள் எம்.எல்ஏ.வும், தமிழ் வளர்ச்சி மன்ற தலைவருமான கே.ஏ. மனோகரன் தலைமை தாங்கினார்.

ஓசூர்,

ஓசூரை சேர்ந்த ஓய்வு பெற்ற தமிழாசிரியரும், சமீபத்தில், தமிழக அரசின் கபிலர் விருதை பெற்றவருமான கருமலை தமிழாழனுக்கு பாராட்டு விழா மற்றும் அவர்

எழுதிய நூல் வெளி

யீட்டு விழா, ஓசூரில் நடைபெற்றது.

ஓசூர் ெரயில் நிலைய சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 2 விழாவிற்கு, ஓசூர் முன்னாள் எம்.எல்ஏ.வும், தமிழ் வளர்ச்சி மன்ற தலைவருமான கே.ஏ. மனோகரன் தலைமை தாங்கினார்.

அறம் இலக்கிய அமைப்பின் செயலாளர் ராசு வரவேற்றார். இதில், கருமலைத்தமிழாழன் எழுதிய "பசி வயிற்றுப் பாச்சோறு" என்ற நூலை , தமிழியக்க பொதுச்செ யலாளரும், பட்டிமன்ற நடுவருமான வாணியம்பாடி அப்துல் காதர் வெளியிட , தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பெற்றுக்கொண்டு, நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்தி பேசினார். மேலும் இதில், ஒருங்கிணைப்பாளர் வணங்காமுடி, ஓசூர் பி.எம்.சி.டெக் கல்வி நிறுவ னங்களின் தலைவர் பி.குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News