உள்ளூர் செய்திகள்
ஓசூர் மாநகராட்சி துணை மேயர் ஆனந்தய்யா ரிப்பன் வெட்டி நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்த காட்சி.
ஓசூரில்ஜம்போ சர்க்கஸ் தொடக்க விழா
- "ஜம்போ சர்க்கஸ்" என்ற சர்க்கஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது.
- இதில், மாநகராட்சி கவுன்சிலர் வரலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓசூர்,
ஓசூரில், தளி சாலையில் வேளாங்கண்ணி பள்ளி அருகே "ஜம்போ சர்க்கஸ்" என்ற சர்க்கஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக, ஓசூர் மாநகராட்சி துணை மேயர் ஆனந்தய்யா கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி,சர்க்கஸ் நிகழ்ச்சிகளை தொடங்கிவைத்தார்.முன்னதாக ஜம்போ சர்க்கஸ் மேலாளர் பி.கே.ரித்தீஷ் வரவேற்றார்.
மேலும் இதில், மாநகராட்சி கவுன்சிலர் வரலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். சர்க்கஸ் நிகழ்ச்சிகள், நாள்தோறும் மதியம் 1 மணி, 3 மணி மற்றும் இரவு 7 மணி ஆகிய 3 காட்சிகள் நடை பெறுவதாகவும், இதில் நாய்கள், குதிரைகள் மற்றும் எத்தியோப்பின், ஆப்பிரிக்கன் கலைஞர்கள் சாகசங்கள் நிகழ்த்து வதாகவும், சர்க்கஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.