உள்ளூர் செய்திகள்

ஓசூரில் கோலாகலமாக பூ கரகம், பல்லக்கு உற்சவம்

Published On 2023-02-12 10:06 GMT   |   Update On 2023-02-12 10:06 GMT
  • மேலும் விழாவையொ ட்டி ஓசூர் பஸ் நிலையம் அருகே நாதஸ்வர கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
  • பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவில் தேர்த் திருவிழா, அடுத்த மாதம் 7-ந்தேதி நடைபெறுகிறது.

தேர்த்திருவிழாவிற்கு முன்னதாக ஆண்டுதோறும் பல்லக்கு உற்சவம் கோலா கலமாக நடைபெறுவது வழக்கம்.

அந்தவகையில் நேற்று இரவு திரவுபதி பூ கரகம் மற்றும் பல்லக்கு உற்சவம், விடியவிடிய நடைபெற்றது.

இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட 40-க்கும் மேற்பட்ட பல்லக்கு களில் விநாயகர், சந்திரசூடேஸ்வார், முருகன் ஆஞ்சநேயர்,, பெருமாள், தர்மராஜ சுவாமி, ராமர், கிருஷ்ண சுவாமி, பாபா, கோட்டை மாரியம்மன், எல்லம்மன், காளியம்மன், துர்க்கை உள்ளிட்ட தெய்வங்களை வைத்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பல்லக்கு உற்சவம் மேளதாளம் மற்றும் நையாண்டி ஆட்டத்துடன் விடிய, விடிய நடைபெற்றது.

மேலும், பூ கரகம் ஆடியவாறு நகரின் முக்கிய வீதிகளின் சென்றது. அப்போது, பொதுமக்கள் கரகத்தை வரவேற்று பூஜைகள் செய்து வழிப ட்டனர்.

மேலும் விழாவையொ ட்டி ஓசூர் பஸ் நிலையம் அருகே நாதஸ்வர கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

விழாவில், ஓசூர் மற்றும் சுற்றுவட்டாரத்தை தேர்ந்த மக்கள் திரளாக கலந்து கொண்டு பல்லக்கு உற்வசத்தை கண்டு மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News