உள்ளூர் செய்திகள்

வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்களில் மொத்தம் 44,973 விண்ணப்பங்கள் பதிவு

Published On 2022-11-29 07:55 GMT   |   Update On 2022-11-29 07:55 GMT
  • கடந்த 9-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
  • அதன் தொடர்ச்சியாக, சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடை பெற்று வருகிறது.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 9-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடை பெற்று வருகிறது. இந்த பணி வருகிற டிசம்பர் 8-ந்தேதி வரை நடக்கிறது.

மாவட்டத்தில் இதுவரை சேர்க்கை விண்ணப்பங்கள் (படிவம்-6) 21,998, நீக்கல் விண்ணப்பகள் (படிவம்-7) 8,620 மற்றும் திருத்தம், இடமாற்றம் (படிவம்-8) 14,355 என மொத்தம் 44,973 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

1.1.2023 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் (அதாவது 31.12.2004 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவர்கள்) பெயரானது ஜனவரி-2023 மாதம் வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறும்.

தற்போது 17 வயதான வர்களும் படிவம்-6ஐ பயன்படுத்தி தங்களுடைய பெயரை சேர்ப்பதற்கு (அதாவது 31.12.2005 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவர்களும்) விண்ணப்பிக்கலாம். இவர்களின் பெயரானது 18 வயது பூர்த்தியடைந்த காலாண்டில் (ஏப்ரல்-2023, ஜூலை-2023, அக்டோபர்-2023) வெளி யிடப்படும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறும்.

எனவே இந்த வாக்காளர் பட்டியல் திருத்தகாலத்தில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பான மனுக்களை அலுவலக வேலை நாட்களில் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் அல்லது வட்டாட்சியர் அலுவல கங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களுக்கு உடனே சென்று தங்களை

பதிவுசெய்து கொள்ளுமா றும். மேலும் இதுவரை தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்து கொள்ளா தவர்கள் இணைத்துக் கொள்ளுமாறும் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News