உள்ளூர் செய்திகள்

நிலக்கடலை நடவு பணிக்காக விவசாயி டிராக்டர் மூலம் சமன் செய்த போது எடுத்தபடம்.

தருமபுரி மாவட்டத்தில் நிலக்கடலை விதைப்பு பணி தீவிரம்

Published On 2022-06-08 16:00 IST   |   Update On 2022-06-08 16:00:00 IST
  • தருமபுரி மாவட்டத்தில் நிலக்கடலை சாகுபடி பணி தீவிரமாக நடந்து வருகிறது.
  • வைகாசி பட்டத்தில் நிலக்கடலை விதைப்பு பணி மேற்கொண்டால் மகசூல் அதிகரிக்கும்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இரு வாரங்களுக்கு முன்பு மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக நிலப்பகுதியில் உழவு செய்ய நிலம் பதம் இருப்பதால் விவசாயிகள் நிலத்தை உழவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வைகாசி பட்டத்தில் நிலக்கடலை விதைப்பு பணி மேற்கொண்டால் மகசூல் அதிகரிக்கும் என்பதால் அன்னசாகரம் எரங்காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் நிலத்தை சமன் படுத்தி வருகின்றனர்.

இந்த ஆண்டு பருவமழை முன்கூட்டியே தொடங்கியு ள்ளதால் நிலக்கடலையை விதைப்பு செய்து வருகின்றனர்.

தொடர்ந்து வரும் மழை காலங்களில் நிலக்கடலை முளைத்து தேவையான நீர் பருவமழை காலத்திலேயே கிடைக்கும் என்பதால் விவசாயிகள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News