உள்ளூர் செய்திகள்

கூடலூர் பகுதியில் மழையால் பாதித்தோருக்கு நிவாரண உதவிகள்

Published On 2022-07-20 11:04 GMT   |   Update On 2022-07-20 11:04 GMT
  • 2500-க்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
  • நிலச்சரிவுகள் ஏற்பட்டு பல வீடுகள் சேதமடைந்தும், சாலைகள் துண்டிக்கப்பட்டும் உள்ளது.

 ஊட்டி:-

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கூடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு பல வீடுகள் சேதமடைந்தும், பல்வேறு சாலைகளும் துண்டிக்கப்பட்டும் உள்ளது.

இதனை நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசா பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார். பந்தலூர் பேரிஸ் ஹால் மற்றும் கூடலூர் நர்த்தகி திருமண மண்டபத்திலும் வைத்து 2500 மேற்பட்டவர்களுக்கு அரிசி, கம்பளி, சேலை, சுமார் வேட்டி, துண்டு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சமீப காலங்களில் யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி 8 பேரின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் வீதம் ரூ.8 லட்சம் வழங்கியதுடன் யானை தாக்கியும், மழையால் வீடுகள் சேதமடைந்த சுமார் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கினார்.

நடுவட்டம், கோழிபாலம் மங்குழி, தொரப்பள்ளி, தெப்பகாடு ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று வெள்ள சேதங்களை பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் மாவட்ட தி.மு.க. செயலாளர் பா.மு.முபாரக்,மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, திராவிடமணி, இளங்கோ, ராஜூ, பாண்டியராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், கூடலூர் பகுதி ஒன்றிய , நகர செயலாளர்கள் லியாகத் அலி, இளஞ்செழியன், சேகரன், சிவானந்த ராஜா, சுஜேஷ், ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ், பேரூர் செயலாளர்கள் சின்னவர், உதயகுமார், சுப்ரமணி, பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, சீனி, ராஜா, நகராட்சி தலைவர்கள் பரிமளா, சிவகாமி, பேரூராட்சி தலைவர்கள் சித்ரா தேவி, வள்ளி, கலியமூர்த்தி, மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் மகேஸ்வரன், ஆலன், எல்கில் ரவி, நவ்புல், பிரதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

Tags:    

Similar News