உள்ளூர் செய்திகள்

கோவை மாவட்டத்தில் 6 லட்சம் வாக்காளர்களின் ஆதார் எண் இணைப்பு

Published On 2022-09-08 15:16 IST   |   Update On 2022-09-08 15:16:00 IST
  • பொள்ளாச்சியில், 80 ஆயிரம் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
  • 20.52 சதவீத வாக்காளர்கள் இணைத்துள்ளனர்.

கோவை, செப்.8-

கோவை மாவட்டத்தில், 30 லட்சத்து, 21 ஆயிரத்து, 446 வாக்காளர்கள் உள்ள னர். இதில், 6 லட்சத்து, 20 ஆயிரத்து, 26 வாக்காளர்கள், தங்களது ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

இன்னும், 24 லட்சத்து, 1,420 வாக்காளர்கள் இணைக்க வேண்டியுள்ளது. மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் அதிகப ட்சமாக, பொள்ளாச்சியில், 80 ஆயிரம், வால்பாறையில், 75 ஆயிரம் வாக்காளர்கள், ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

சிங்காநல்லுார் தொகுதியில் மிகவும் குறைவாக, 47 ஆயிரத்து, 282 வாக்காளர்கள் மட்டும் இணைத்துள்ளனர். மாவட்ட அளவில், 20.52 சதவீத வாக்காளர்கள் இணைத்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறும்போது,

100 சதவீதம் தவறில்லாத வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதில் இறந்தவர்கள் பெயர் நீக்கப்படுவதோடு, ஒருவருக்கே 2 பதிவு இருந்தால் காட்டிக் கொடுத்து விடும்.

இதனால் வாக்காளர்கள் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிடலாம். இன்னும் 6 மாதங்கள் அவகாசம் இருப்பதால், அனைத்து வாக்காளர்களின் ஆதார் எண்ணும் இணைத்து விடுவோம் என்றனர்.

Tags:    

Similar News