உள்ளூர் செய்திகள்

பாகலூரில் அம்பேத்கரின் 66-வது நினைவு தினம் அனுசரிப்பு

Published On 2022-12-07 15:30 IST   |   Update On 2022-12-07 15:30:00 IST
  • பாகலூரில், டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 66-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக் கப்பட்டது.
  • முன்னாள் அமைச்சர் பால கிருஷ்ண ரெட்டி கலந்து கொண்டு அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஓசூர்,

ஒசூர் அருகே பாகலூரில், டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 66-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக் கப்பட்டது.

இதில், மேற்கு மாவட்ட அ.தி.மு.க செயலா ளரும், முன்னாள் அமைச்சர் பால கிருஷ்ண ரெட்டி கலந்து கொண்டு அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும் இதில், ஒசூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான ரவிக்குமார், ஒசூர் ஒன்றியக்குழு தலைவரும், ஒன்றிய இணை செயலாளருமான சசி வெங்கடசாமி, ஒன்றிய கவுன்சிலர் முனிரத்னா முனிராஜ், ஓசூர் அனைத்து குடியிருப்போர் நல சங்க தலைவர் துரை உள்பட பலர் கலந்துக்கொண்டனர்

Tags:    

Similar News