உள்ளூர் செய்திகள்

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.

அன்னப்பன்பேட்டையில், வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றம்

Published On 2022-10-27 08:06 GMT   |   Update On 2022-10-27 08:06 GMT
  • ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த பகுதிகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது.
  • ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

மெலட்டூர்:

பாபநாசம் தாலுக்கா, அன்னப்பன்பேட்டை கிராமத்தில் பல விவசாய நிலங்களின் முக்கிய வடிகால் வாய்க்காலை தனிநபர் சிலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.

அதனால் மழை காலங்களில் ஏராளமான விவசாய நிலங்கள் பாதிக்கப்–பட்டு வந்தது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பாபநாசம் தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோரிடம் வடிகாலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி மனு கொடுத்திருந்தனர்.

இதுகுறித்த செய்தி மாலைமலரில் வெளியிடப்–பட்டது.

இதனை தொடர்ந்து பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூத்தரசன், அமானுல்லா, மண்டல துணை வட்டாட்சியர் விவேகானந்தன், மெலட்டூர் காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன், சரக வருவாய் ஆய்வாளர் கணேஷ்பாபு ஆகியோர் முன்னிலையில் வடிகால் வாய்க்காலில் தனிநபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த பகுதிகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது.

வடிகாலில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி காரணமாக அன்னப்பன்பேட்டை பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

Tags:    

Similar News