உள்ளூர் செய்திகள்

வீடுகளில் கருப்பு கொடி கட்டி உள்ளதை படத்தில் காணலாம். 

கடலூர் ஆல்பேட்டை பகுதியில் கோவில்- வீடுகளில் கருப்பு கொடி கட்டிய பொது மக்கள் திடீர் போராட்டத்தால் பரபரப்பு

Published On 2023-01-14 09:17 GMT   |   Update On 2023-01-14 09:17 GMT
  • 44 குடும்பங்களை சாலை விரிவாக்கத்திற்காக நெடுஞ்சாலை துறையினர் காலி செய்ய வேண்டும் என ஏற்கனவே நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
  • ஹவுசிங் போர்டில் மாற்று இடம் வழங்க வேண்டி வீட்டின் முன்பு கருப்பு கொடி கட்டி எதிர்ப்பை தெரிவித்தனர்.

கடலூர்:

கடலூர் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை ராஜ விநாயகர் வீதியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் வசித்து வரும் 44 குடும்பங்களை சாலை விரிவாக்கத்திற்காக நெடுஞ்சாலை துறையினர் காலி செய்ய வேண்டும் என ஏற்கனவே நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையிலும், பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் வருகிற ஜனவரி 20ஆம் தேதிக்குள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என மீண்டும் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

இதன் காரணமாக ஒருங்கிணைப்பாளர்ஆல்பேட்டை பாபு தலைமையில் 44 வீட்டிலும் மற்றும் முத்தாலம்மன் கோவில் ஆலயத்திலும் தங்களுக்கு குண்டு சாலை சாலை ஹவுசிங் போர்டில் மாற்று இடம் வழங்க வேண்டி வீட்டின் முன்பு கருப்பு கொடி கட்டி எதிர்ப்பை தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News