வாலிபால் போட்டியில்சாதனை படைத்த ஓசூர் மாணவிகளுக்கு பாராட்டு
- தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, ராஜஸ்தான் என பல மாநிலங்களிலிருந்தும் 1,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.
- இதில் வாலிபால் போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் ஓசூர் மாணவிகள் கலந்து கொண்டு முதலிடத்தை பிடித்தனர்.
ஓசூர்,
ஜம்மு, காஷ்மீர் மாநிலம் ஜம்மு தவி என்ற இடத்தில் உள்ள யூனிவர்சிட்டி ஆஃப் ஜம்முவில், "யூத் அண்ட் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன், ஜம்மு மற்றும் காஷ்மீர் அசோசியே சன் சார்பில், கடந்த 19-ஆம் தேதி முதல் 21-ந் தேதி வரை நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன.
இதில் கால்பந்து, கூடைப்பந்து, வாலிபால், ஆர்ச்சரி, பேட்மிட்டன், டேபிள் டென்னிஸ், அத்லெட்டிக் போன்ற பல போட்டிகள் இடம்பெற்றன. போட்டிகளில், ஹரியானா, பஞ்சாப், ஜம்மு ,காஷ்மீர், டெல்லி, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, ராஜஸ்தான் என பல மாநிலங்களிலிருந்தும் 1,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதில் வாலிபால் போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் ஓசூர் மாணவிகள் கலந்து கொண்டு முதலிடத்தை பிடித்தனர். இந்த வாலிபால் போட்டியில் அரை இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு மகளிர் அணி, அரியானா மகளிர் அணியை எதிர்கொண்டு வெற்றி பெற்றும், இறுதிப் போட்டியில் ஜம்மு காஷ்மீர் அணியை எதிர்கொண்டு வென்று முதல் இடத்தை பிடித்து சாதனை புரிந்தது. தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவிகளையும் பயிற்சியாளர்கள் தாயுமானவன் மற்றும் மாணிக்கவாசகம் ஆகியோரையும், ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா நேரில் பாராட்டி, இனிப்புகளை வழங்கி வாழ்த்தினார்.