உள்ளூர் செய்திகள்

ஹாக்கி போட்டியில் தென்னிந்திய அளவில் மாணவர்கள் சாதனை

Published On 2023-03-29 15:35 IST   |   Update On 2023-03-29 15:35:00 IST
  • தென்னிந்திய அளவிலான ஜூனியர் ஹாக்கி போட்டியில் தமிழகஅணி வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது.
  • இவர்களின் பெற்றோர்களுக்கு நினைவு பரிசு மற்றும் கேடயம் வழங்கி பாராட்டி கவுரவித்தார்.

பாலக்கோடு,  

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்கள் முருகன் மற்றும் மங்கா, ஆகியோரின் பிள்ளைகள் சீனிவாசன் (வயது18), கனிமொழி (17) ஆகியோர் கடந்த 20-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை ராமநாதபுரத்தில் நடைப்பெற்ற தென்னிந்திய அளவிலான ஜூனியர் ஹாக்கி போட்டியில் தமிழகஅணி வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது.

இதில் ஆடவர் அணியில் சீனிவாசன் கேப்டனாக சிறப்பாக விளையாடி தமிழக அணிக்கு தங்கப் பதக்கம் பெற்று தந்தார். அதே போன்று மகளிர் பிரிவில் கனிமொழி அணி வெள்ளி பதக்கம் பெற்றது.

இவர்களை பாராட்டும் விதமாக பாலக்கோடு பேரூராட்சி சார்பாக பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் பி.கே.முரளி சீனிவாசன், கனிமொழி மற்றும் இவர்களின் பெற்றோர்களுக்கு நினைவு பரிசு மற்றும் கேடயம் வழங்கி பாராட்டி கவுரவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி, துப்புரவு மேற்பார்வையாளர் ரவீந்திரன், உடற்கல்வி ஆசிரியர் ரங்கநாதன், பேரூராட்சி துணைத் தலைவர் தாஹசீனா இதயத்துல்லா, கவுன்சிலர்கள் சரவணன், பெரியசாமி, ரூஹித், பத்தேகான், சாதிக் மற்றும் துப்புரவு பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டு பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Similar News