உள்ளூர் செய்திகள்

மீன்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.

போடியில் விற்பனைக்கு வைத்திருந்த கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் - கடைகளுக்கு அபராதம்

Published On 2023-10-10 10:31 IST   |   Update On 2023-10-10 10:31:00 IST
  • தேனி மாவட்ட மீன்வள த்துறை, போடி நகராட்சி சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் நகராட்சி மீன் மார்க்கெட் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
  • கெட்டுப்போன மீன்கள் கண்டறியப்பட்டு உணவு பாதுகாப்புத் துறை யினர் அவற்றைக் கைப்பற்றி குளோரின் பவுடர் கொட்டி 25 கிலோ மீன்களை அழித்தனர்.

மேலசொக்கநாதபும்:

தேனி மாவட்டம் போடியில் உள்ள மீன் கடைகளில் கெட்டுப்போன மீன் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. அதனைத் தொடர்ந்து இன்று காலை தேனி மாவட்ட மீன்வள த்துறை, போடி நகராட்சி சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் நகராட்சி மீன் மார்க்கெட் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்குள்ள மீன்கள் தரம் உள்ளவையா அல்லது பார்மலின் கலக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உபகரணங்கள் மூலம் ஆய்வு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து அவர்கள் மீன்கள் பாதுகாத்து வைத்திருக்கும் இடத்திற்கு சென்று ஆய்வு செய்த போது உரிய குளிர்சாதன வசதி இன்றி கெட்டுப்போன நிலையில் துர்நாற்றம் வீசிய மீன்கள் இருப்பு வைக்கப்பட்டி ருந்ததை கண்டறிந்து உடனடியாக அந்த மீன்களை கைப்பற்றினர்.

மேலும் மாலை வேலைகளில் பொரித்து விற்பனை செய்வதற்காக மசாலா தடவி வைக்கப்பட்ட மீன்களும் கெட்டுப்போன பெட்டியில் இருப்பு வைத்து இருந்தது கண்டறியப்பட்டு உணவு பாதுகாப்புத் துறை யினர் அவற்றைக் கைப்பற்றி குளோரின் பவுடர் கொட்டி 25 கிலோ மீன்களை அழித்தனர்.

மேலும் அவர்கள் தடை செய்ய ப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை கண்டறிந்து நகராட்சி சுகாதாரத் துறையினர் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்த னர். இனி இதுபோன்று கெட்டுப் போன மீன்களை வியாபாரம் செய்தாலோ அல்லது விதிமுறைகளை மீறி உணவுப் பொருள்களை பாதுகாப்பின்றி வைக்க ப்பட்டாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து சென்றனர்.

கெட்டுப்போன மீன்களை வைத்திருப்ப தற்காக அந்த கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தேனி மாவட்ட மீன்வள த்துறை அலுவலர் பாண்டி யன், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சரண்யா, போடி நகராட்சி சுகாதார த்துறை அலுவலர்கள் மணிகண்டன், சுரேஷ்குமார் ஆகியோர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News