உள்ளூர் செய்திகள்

மக்கள் குறை தீர்க்கும் முகாமில் 87 மனுக்கள் மீது உடனடி தீர்வு

Published On 2023-10-19 15:17 IST   |   Update On 2023-10-19 15:17:00 IST
  • தருமபுரி எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாமில் 87 மனுக்களுக்கு உடனடித் தீர்வு அளிக்கப்பட்டது
  • வாரந்தோறும் நடக்கிறது

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வரும் நிலத்தகராறு, அடிதடி, பணப்பிரச்சனை, குடும்ப தகராறு உள்ளிட்ட நிலுவையில் உள்ள வழக்குகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி.ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாமில் மொத்தம் 87 மனு பெறப்பட்டு அதில் 87 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது.

இதில் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், காவல் துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், மற்றும் காவல் ஆய்வாளர்கள் சர்மிளா பானு, பாலகிருஷ்ணன், அன்பழகன், காவல் உதவி ஆய்வாளர்கள் விஜயா செல்வி இளமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News