உள்ளூர் செய்திகள்

டிரான்பார்மர் உடைக்கப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.

ஒரே மாதத்தில் 5 இடங்களில் வேட்டை: தேன்கனிகோட்டையில் டிரான்ஸ்பார்மரில் மின்கம்பி திருட்டு

Published On 2023-06-23 14:41 IST   |   Update On 2023-06-23 14:41:00 IST
  • மின்துறை அதிகாரிகள் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
  • இதன் மதிப்பு 2 லட்சத்து 50 ஆயிரம் என தெரிவித்தனர்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை சுற்றுபுற பகுதிகளில் அடிக்கடி டிரான்ஸ்பார்மார் உடைக்கப்பட்டு மின்கம்பி திருடுவது வாடிக்கையாக உள்ளது. இதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

இந்நிலையில் தேன்கனிக்கோட்டை- பாலதோட்டன ப்பள்ளி சாலையில் உள்ள பால் குளிருட்டும் நிலையம் அருகில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் வீட்டுமனைகள் உள்ளது.

இங்குள்ள டிரான்ஸ் பார்மர் உடைக்கப்பட்டு உள்ளதை கண்டு அப்பகுதி மக்கள் மின்சார அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து மின்துறை அதிகாரிகள் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

16 மற்றும் 25 கே.வி கொண்ட இரண்டு டிரான்ஸ்பார்மர்களை உடைத்து அதிலிருந்த 240 லிட்டர் ஆயில் மற்றும் 120 கிலோ காப்பர் கம்பிகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளது.

இதன் மதிப்பு 2 லட்சத்து 50 ஆயிரம் என தெரிவித்தனர்.

இதுகுறித்து மின்துறை பொறியாளர் தேன்மொழி கொடுத்த புகாரின்பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குபதிந்து மின்கம்பி மற்றும் ஆயில் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இப்பகுதியில் ஒரே மாதத்தில் 5 இடங்களில் டிரான்ஸ்பார்மர் உடைத்து மின்கம்பிகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளதாக குறிப்பிடத்தக்கது. இதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News