ஹூப்ளி-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயில் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு
- ஹூப்ளி-ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (வண்டி எண்-07356) ஆகிய ரெயில்கள் தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி வழியாக வாரந்தோறும் இயக்கப்பட்டு வருகிறது.
- இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம்:
ஹூப்ளி-ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (வண்டி எண்- 07355) மற்றும் ஹூப்ளி-ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (வண்டி எண்-07356) ஆகிய ரெயில்கள் தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி வழியாக வாரந்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்கள் மார்ச் மாதம் வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த ரெயில் சேவை ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி ஹூப்ளி-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயிலின் (வண்டி எண்-07355) சேவை காலம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி முதல் ஜூன் மாதம் 24-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த ரெயில் ஹூப்ளி ரெயில் நிலையத்தில் இருந்து சனிக்கிழமைகளில் காலை 6.30 மணிக்கு புறப்பட்டு ஓசூர், தர்மபுரி, வழியாக இரவு 7.50 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து 7.55 மணிக்கு புறப்பட்டு நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, ராமநாதபுரம் வழியாக மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.15 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்.
இதேபோல் மறு மார்க்கத்தில் இயக்கப்படும் ராமேஸ்வரம்-ஹூப்ளி வாராந்திர எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (வண்டி எண்-07356) அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந் தேதி முதல் ஜூன் மாதம் 25-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை களில் காலை 6.30 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு கரூர், நாமக்கல் வழியாக மறுநாள்(திங்கட்கிழமை) காலை 5.45 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து 5.50 மணிக்கு புறப்பட்டு தர்மபுரி, ஓசூர் வழியாக இரவு 7.25 மணிக்கு ஹூப்ளி சென்றடையும், இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.