உள்ளூர் செய்திகள்

ஓசூர் கோதண்டராமர் கோவில் தெப்ப உற்சவம்

Published On 2023-08-28 09:24 GMT   |   Update On 2023-08-28 09:24 GMT
  • வேதபாராயணம், பிரபந்த பாராயண சாற்று முறை நிகழ்ச்சிகளும் நடந்தது.
  • இரவு ஓசூர் ராம நாயக்கன் ஏரி அருகே ஜலகண்டேஸ்வரர் கோவில் குளத்தில் தெப்ப உற்சவமும் நடை பெற்றது.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நேதாஜி சாலையில், மிக வும் பழமையான, பிரசித்தி பெற்ற ஸ்ரீகோதண்டராமர் கோவில் உள்ளது.

இங்கு பவித்ரோத்சவ விழா, கடந்த புதன்கிழமை, 81 கலச திருமஞ்சன நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து, சனிக்கிழமை வரை அங்குரார்ப்பணம், புண்யாஹவாசனம், துவார பூஜை, பவித்ர பிரதிஷ்டை மற்றும் கும்ப மண்டல ஆராதனையும் சிறப்பு ஹோமங்களும் நடை பெற்றது. தொடர்ந்து, வேதபாராயணம், பிரபந்த பாராயண சாற்று முறை நிகழ்ச்சிகளும் நடந்தது.

நேற்று விழாவின் முக்கிய நிகழ்ச்சி யாக, சம்வத் சரோத்சவ நிகழ்ச்சியும், இரவு ஓசூர் ராம நாயக்கன் ஏரி அருகே ஜலகண்டேஸ்வரர் கோவில் குளத்தில் தெப்ப உற்சவமும் நடை பெற்றது.

பின்னர் சிறப்பு பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. தலைமை அர்ச்சகர் கேசவன் தலைமையில், அர்ச்சகர்கள் ரகுராமன், சுதர்சன் மற்றும் யோகேஷ் ஆகியோர் சிறப்பு ஹோமங்கள் மற்றும் சிறப்பு பூஜைகளை நடத்தினர்.

இதில், விழாக் குழு தலை வரும், முன்னாள் ஓசூர் எம்.எல்.ஏ.வுமான கோபிநாத், மற்றும் நீலகண்டன் உள்ளிட்ட கமிட்டி நிர்வா கிகள்,கோவில் செயல் அலுவலர் சாமிதுரை, ஆய்வாளர் சக்திவேல், கோவில் பணி யாளர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News