உள்ளூர் செய்திகள்

ஓசூர் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் கருத்துப்பட்டறை

Published On 2022-07-01 15:04 IST   |   Update On 2022-07-01 15:04:00 IST
  • தமிழ்நாட்டில் மாநக ராட்சிகள், நகராட்சிகளில் இந்த கருத்து பட்டறைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
  • கைகளால் சுத்தம் செய்வதை தடுக்க மானிய விலையில் உபகரணங்கள் வழங்கப்படுவதை பொது மக்கள், தொழிலாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஓசூர்,

ஓசூர் மாநகராட்சி, மாநகர தூய்மை பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள் உள்ளிட்டோருக்கான கருத்துப்பட்டறை நடைபெற்றது.

சாக்கடைகள் மற்றும் செப்டிக் டேங்குகளை அபாயகரமான முறையில் சுத்தம் செய்வதிலிருந்து பணியாளர்களை காக்கும் வகையிலான கருத்துப்பட்டறை மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக தேசிய தூய்மை பணியாளர் நிதி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உதவியுடன் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் மாநக ராட்சிகள், நகராட்சிகளில் இந்த கருத்து பட்டறைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஓசூர் ரெயில்நிலைய சாலையில் உள்ள தனியார் மண்ட பத்தில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு மேயர் எஸ்.ஏ.சத்யா, தலைமை தாங்கினார்.

அவர் பேசுகையில், கைகளால் கழிவுகளை அள்ளுவது,சாக்கடைகளை சுத்தம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. பணி யாளர்கள் முறையான உபக ரணங்களை பயன்படுத்தியே இதுபோன்ற பணிகளில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதில், தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நிறுவன இயக்கு னர் மோகன்ராம் கலந்து கொண்டு, கைகளால் சுத்தம் செய்வதை தடுக்க மானிய விலையில் உபகரணங்கள் வழங்கப்படுவதை பொது மக்கள், தொழிலாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு, மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாமன்ற உறுப்பினர்கள், சுகாதார ஆய்வாளர்கள், ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News