உள்ளூர் செய்திகள்
ஒசூர் 22-வது வார்டு பகுதிகளில்மேயர் சத்யா, திடீர் ஆய்வு
- அடிப்படை வசதிகள் குறித்தும், பொது மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.
- பொதுமக்களிட மிருந்து கோரிக்கை மனுக்களையும் அவர் பெற்றுக்கொண்டார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மாநகராட்சி 22-வது வார்டுக்குட்பட்ட அன்னை நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா, நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது,சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், பொது மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.
மேலும், பொதுமக்களிட மிருந்து கோரிக்கை மனுக்களையும் அவர் பெற்றுக்கொண்டார்.இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் சினேகா, 22-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் மற்றும் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.