உள்ளூர் செய்திகள்

பேரணி செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்திய காட்சி.

தேசிய கொடியுடன் பேரணி சென்ற இந்து முன்னணியினர் கைது

Published On 2022-08-15 08:14 GMT   |   Update On 2022-08-15 08:14 GMT
  • சுதந்திர தின விழாவை முன்னிட்டு கடந்த சில நாட்களாக பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வ அமைப்பினர் சார்பில் தேசிய கொடியுடன் பேரணி செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • அய்யலூரில் இந்து முன்னணியினர் சார்பில் தேசிய கொடியுடன் பேரணி செல்ல முயன்றபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

வடமதுரை:

தமிழகம் முழுவதும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கடந்த சில நாட்களாக பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வ அமைப்பினர் சார்பில் தேசிய கொடியுடன் பேரணி செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் விதவிதமான கலை நிகழ்ச்சிகளுடன் மிக நீண்ட தேசிய கொடியை ஏந்தியவாறு வீடு தோறும் கொடியேற்ற வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் இந்து முன்னணியினர் சார்பில் தேசிய கொடியுடன் பேரணி செல்ல முயன்றனர்.

மாவட்ட செயலாளர் சதீஸ் தலைமையில் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் ஊர்வலமாக செல்ல முயன்ற போது வடமதுரை இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

பேரணியாக செல்ல இன்று அனுமதி கிடையாது. தேசிய கொடி ஏற்றி விட்டு செல்லுங்கள் என தெரிவித்தனர். ஆனால் அவர்கள் பேரணி செல்ல போவதாக கூறவே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

மேலும் கைதான 17 பேரையும் தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News