உள்ளூர் செய்திகள்

கடத்தூர் பகுதியில் ரூ.2.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட உயர் மின் கோபுர விளக்குகள் திறப்பு

Published On 2023-09-08 15:23 IST   |   Update On 2023-09-08 15:23:00 IST
  • கடத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 2022- 2023-ஆண்டின் எம்.பி. நிதி திட்டத்தின் கீழ் ரூ.2.50 லட்சம் மதிப்பிலான உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டது.
  • கடத்தூர் பகுதியில் ரூ.2.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட உயர் மின் கோபுர விளக்குகள் திறப்பு விழா நடைபெற்றது.

பாப்பிரெட்டிப்பட்டி:

தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஒடசல்பட்டி, மணியம்பாடி, தேக்கநாயக்கன்பட்டி, உள்ளிட்ட கிராமங்களில் எம்.பி தொகுதி மேம்பாட்டு திட்டம் 2022- 2023-ன் கீழ் ரூ.2.50 லட்சம் மதிப்பிலான உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டது. இதனை தருமபுரி எம்.பி செந்தில்குமார் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

இதில் ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், மணியம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா சரவணன், ஒன்றிய துணைத் செயலாளர் சரவணன், பி.டி.ஏ தலைவர் ரமேந்தர், கருணாகரன், கடத்தூர் நகர செயலாளர் மோகன், பேரூராட்சி தலைவர் கேஸ் மணி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் முனிராஜ், தங்கராஜ், பழனி, பச்சையப்பன், கண்ணன், சதீஷ்குமார், பிரகாஷ், சென்னகிருஷ்ணன், ஆண்டியப்பன், சின்னதுரை, அன்பரசு, சரவணன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News