உள்ளூர் செய்திகள்

திருவாரூர் பகுதியில் நேற்று பெய்த கனமழையால் மின் கம்பம் சாய்ந்து கிடந்தது.

திருவாரூர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை

Published On 2023-08-10 09:54 GMT   |   Update On 2023-08-10 09:54 GMT
  • கடுமையான வெப்பம் நிலவியதால் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர்.
  • நேற்று நள்ளிரவு முதல் இரண்டு மணி நேரத்திற்கு பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

திருவாரூர்:

கடந்த இரண்டு மாதங்களாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடுமையான வெப்பம் நிலவி வந்த நிலையில் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர்.

குறிப்பாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மாணவர்கள் முதல் வேலைக்கு செல்பவர்கள் வரை வெயிலின் தாக்கத்தால் கடுமையாக பாதிக்க ப்பட்டனர்.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் குளிர்ந்த காற்று வீசிவந்த நிலையில் கடந்த இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

குறிப்பாக திருவாரூர், நன்னிலம், சண்ணாநல்லூர், மாங்குடி, கமலாபுரம், பூந்தோட்டம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

இந்த கனமழையின் காரணமாக பொதுமக்கள் மக்கள் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் ஆற்றில் தண்ணீர் இல்லாத காரணத்தினால் பயிர்கள் கருகி வந்த நிலையில் இந்த மழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக நன்னிலத்தில் 5 சென்டிமீட்டர் மழை அளவு, திருவாரூரில் 2 சென்டிமீட்டர், மன்னார்கு டியில் 1.7 சென்டிமீட்டர், வலங்கைமான் நீடாமங்க லத்தில் 1 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது. மாவட்டம் முழுவதும் 135 மில்லி மீட்டர் மலையளவு பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News