உள்ளூர் செய்திகள்

தடியன்குடிசை அருகே கனமழையால் மரத்தில் இருந்து கிளைகள் தொங்கி போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள காட்சி.

கொடைக்கானல் அருகே தொடர் மழை: மரக்கிளைகள் முறிந்து போக்குவரத்துக்கு பாதிப்பு

Published On 2023-11-08 06:29 GMT   |   Update On 2023-11-08 06:29 GMT
  • கொடைக்கானல் மற்றும் மலை கிராமங்களில் கனமழை பெய்து வருகிறது.
  • மரக்கிளைகள் பஸ்களின் கண்ணாடிகள் மீது மோதி நொறுங்கி விழுந்து விபத்துகள் ஏற்படுகிறது.

பெரும்பாறை:

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் இருந்து பெரும்பாறை, தடிய ன்குடிசை, குப்பம்மா ள்பட்டி, கே.சி.பட்டி, ஆடலூர் வழியாக பன்றிமலைக்கு அரசு பஸ் காலை, மாலை இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்சில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் மலைத் தோட்டங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் சென்று வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மற்றும் மலை கிராமங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்க ளில் மரங்கள் முறிந்து சாலையில் விழுவதும் பின்னர் ஊழியர்கள் அதனை அகற்றுவதும் நடந்து வருகிறது.

இது மட்டுமின்றி உயர்ந்த மரங்களில் இருந்து மரக்கிளைகள் முறிந்து சாலையில் தொங்கியபடி உள்ளன. இந்த மரக்கிளைகள் பஸ்களின் கண்ணாடிகள் மீது மோதி நொறுங்கி விழுந்து விடுகின்றன. இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிள்களில் வருபவர்கள் மரக்கிளைகளை கவனிக்கா விட்டால் அவர்கள் முகத்தை பதம்பார்த்து விடுகிறது. தடியன்குடிசை யில் இருந்து குப்பம்மா ள்பட்டி வரை 13 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது.

இந்த மலைச்சாலைகளில் பல்வேறு இடங்களில் இது போன்று மரக்கிளைகள் அந்தரத்தில் தொங்கி விபத்தை ஏற்படுத்தி வருகின்றன. இரவு நேரங்களில் மழை பெய்து வந்தாலும் பகல் நேரங்களில் வெயில் அடிப்பதால் அது போன்ற சமயங்களில் அந்தரத்தில் தொங்கும் மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News