உள்ளூர் செய்திகள்

பண்ணைக்காடு பிரிவு அருகே முறிந்து விழுந்த மரம்


கொடைக்கானல் கீழ்மலையில் பலத்த மழைக்கு மரம் முறிந்து கோவில், வீடு சேதம் போக்குவரத்து பாதிப்பு

Published On 2022-11-11 11:06 IST   |   Update On 2022-11-11 11:06:00 IST
  • மஞ்சள்பரப்பு கிராமத்தில் 25 வருட பழமையான அரசமரம் முறிந்து விழுந்தது.
  • கோவில், வீடு சேதமானதுடன் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

பெரும்பாறை:

கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பெரும்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இன்று காலையும் மழை தொடர்ந்து பெய்ததால் பல்வேறு தரப்பினரும் சிரமம் அடைந்தனர்.

மஞ்சள்பரப்பு கிராமத்தில் 25 வருட பழமையான அரசமரம் முறிந்து விழுந்ததில் அருகில் இருந்த விநாயகர் கோவில் மற்றும் இளையராஜா என்பவருக்கு சொந்தமான வீடு சேதமானது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மணலூர் ஊராட்சி தலைவர் லதா செல்வக்குமார் விரைந்து சென்று பணியாளர்களுடன் மரத்தை அறுத்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தார். அதன்படி மரம் அகற்றப்பட்டது.

பண்ணைக்காடு பிரிவு பகுதியில் இருந்து பண்ணைக்காடு செல்லும் சாலையில் திடீரென மரம் முறிந்து விழுந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து பணியாளர்கள் அதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

Tags:    

Similar News