உள்ளூர் செய்திகள்

ஊத்தங்கரை அருகே கொல்லப்பட்டி குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்து இருப்பதையும், மரம் வேரோடு சாய்ந்து இருப்பதையும் படத்தில் காணலாம்.

தருமபுரி-கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை

Published On 2023-09-01 15:35 IST   |   Update On 2023-09-01 15:35:00 IST
  • கனமழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை உருவானது.
  • தருமபுரியில் 60 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

தருமபுரி,

தமிழ்நாட்டில் மேற்கு உள் மாவட்டங்கள், வட உள் மாவட்டங்கள், தென் உள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் மத்திய உள் மாவட்டங்களில் பெரும் பாலான பகுதிகள் முதல் ஆங்காங்கே பரவலாக இடியுடன் கூடிய கன மழையும், ஒரு சில பகுதிகளில் மிக கன மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் நல்ல மழை பெய்து வந்தது. நேற்று காலை முதல் மாவட்டம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் மாலை திடீரென கனமழை பொழிய தொடங்கியது. இதில் தருமபுரி நகர் பகுதி மற்றும் செட்டிக்கரை, ராஜாப்பேட்டை, பழைய தருமபுரி, பனந்தோப்பு, நடுப்பட்டி, சோலைக்கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. மேலும் இரவு ஒன்பது மணிக்கு மேல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது இந்த மழையால் நேதாஜி பைபாஸ் சாலையில் கழிவுநீருடன் சாக்கடை நீரும் சேர்ந்து ஆறாக ஓடியது சில இடங்களில் குளம் போல் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

மாவட்டத்தில் தருமபுரி 60 மி.மீ, பாலக்கோடு 11 மி.மீ, பென்னாகரம் 4 மி.மீ, ஒகேனக்கல் 20 மி.மீ, பாப்பிரெட்டிப்பட்டி 3.2 மி.மீ, அரூர் 37 மி.மீ, மொரப்பூர் 10 மி.மீ, நல்லம்பள்ளி 21 மி.மீ, என மொத்தம் 166.2 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இந்த கனமழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை உருவானது. மேலும் மழையில்லாமல் பயிர்கள் காய்ந்து வந்த நிலையில், தொடர்ந்து பெய்து வரும் இந்த மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட் டத்தில் ஊத்தங்கரை, ஓசூர், கிருஷ்ணகிரி, வேப்பன அள்ளி உள்ளிட்ட பகுதி களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

கிருஷ்ணகிரி மாவட் டம் ஊத்தங்கரை பகுதி யில் 2 மணி நேரமாக இரவு பெய்த மழையின் காரணமாக கொல்லப் பட்டி குடியிருப்பு பகுதி யில் சுமார் 20 வீடுகளில் மழைநீர் புகுந்ததால் பெரிதும் பாதிக்கப்பட்டு எள்ளனர். நேற்று இரவு ஊத்தங்கரை பகுதியில் சுமார் 86. 20 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது.

அதிகளவில் மழை பெய்யும் நேரங்களில் வீடுகளில் மழை நீர் செல்வது தொடர் கதையாக உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக் குள்ளாகிறது.

இது தொடர்பாக உரிய அதிகாரியிடம் ஒவ்வொரு முறை மழை வரும் பொழுதும் பொதுமக்கள் தெரிவித்தும் மழை நீர் வடிக்கால்களை தூர்வாரி தூய்மைப் படுத்துவ தில்லை என குற்றம் சாட்டி வருகின்றனர்.

அதிகாலை முதல் இப்பகுதியில் உள்ள கிருஷ்ணகிரி புதுச்சேரி சாலையில் மழை நீர் தேங்கிய வண்ணம் வாகனங்களும் கடந்து செல்கின்றன தகவல் தெரிவித்தும் இதுவரை சம்பவ இடத்திற்கு எந்த ஒரு அதிகாரியும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஓசூரில் நேற்று இரவு 16.1 மி.மீ மழை பெய்தது. தொடர் மழையின் காரண மாக ரயில் நிலையம் அருகே, பாலத்தின் கீழ், மழைநீர் குளம் போல் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

இன்று காலை, தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்ற சம்பந்தப் பட்ட துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வாகன போக்குவரத்துக்கு சீர மைத்ததால், பொது–மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags:    

Similar News